இயக்குநர் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதன் பின் பாரதிராஜா இயக்கிய 'நிறம் மாறாத பூக்கள்', 'கிழக்குச் சீமையிலே', 'பசும்பொன்' உள்ளிட்ட படங்களில் ராதிகா நடித்துள்ளார்.
இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். தற்போது குணச்சித்தர வேடத்திலும் அம்மா வேடங்களிலும் நடித்து வருகிறார் ராதிகா. இவர், தற்போது தேனியில் 'மருதா' என்னும் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
-
Breakfast in Theni with my director @offBharathiraja dropped in from my sets , I talked and he listened❤️❤️❤️❤️ pic.twitter.com/eka6iSrMkH
— Radikaa Sarathkumar (@realradikaa) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Breakfast in Theni with my director @offBharathiraja dropped in from my sets , I talked and he listened❤️❤️❤️❤️ pic.twitter.com/eka6iSrMkH
— Radikaa Sarathkumar (@realradikaa) November 10, 2019Breakfast in Theni with my director @offBharathiraja dropped in from my sets , I talked and he listened❤️❤️❤️❤️ pic.twitter.com/eka6iSrMkH
— Radikaa Sarathkumar (@realradikaa) November 10, 2019
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவை தேனியில் வைத்து ராதிகா சந்தித்துள்ளார். சந்திப்பு குறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”தேனியில் எனது காலை உணவை இயக்குநர் பாரதிராஜாவுடன் உண்டேன். அப்போது நான் பேசினேன் அவர் கேட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
பாரதிராஜா சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டுப்பிள்ளை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 'ராக்கி' என்னும் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின் பாரதிராஜா இசைஞானி இளையராஜாவையும் சந்திந்தார் என்பது கூடுதல் தகவல்.