நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனையொட்டி பொங்கல் விடுமுறைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பல படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக 'ராதே ஷ்யாம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது.
-
We have to postpone the release of our film #RadheShyam due to the ongoing covid situation. Our sincere thanks to all the fans for your unconditional love and support.
— UV Creations (@UV_Creations) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We will see you in cinemas soon..!#RadheShyamPostponed pic.twitter.com/aczr0NuY9r
">We have to postpone the release of our film #RadheShyam due to the ongoing covid situation. Our sincere thanks to all the fans for your unconditional love and support.
— UV Creations (@UV_Creations) January 5, 2022
We will see you in cinemas soon..!#RadheShyamPostponed pic.twitter.com/aczr0NuY9rWe have to postpone the release of our film #RadheShyam due to the ongoing covid situation. Our sincere thanks to all the fans for your unconditional love and support.
— UV Creations (@UV_Creations) January 5, 2022
We will see you in cinemas soon..!#RadheShyamPostponed pic.twitter.com/aczr0NuY9r
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ளப் பதிவில், "நாங்கள் சில நாள்களாக எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம். ஆனால் ஒமைக்ரான் தொற்று காரணமாக நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. விரைவில் உங்களைத் திரையரங்குகளில் சந்திப்போம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில், ஒமைக்ரான் பரவல் காரணமாகத் தள்ளிப்போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகிறதா விக்ரமின் மகான்?