ஜேம்ஸ் பாண்ட் சீரியஸில் 2008ஆம் ஆண்டு வெளியான படம் 'குவாண்டம் ஆஃப் சோலஸிஸ்' படத்தில் நடித்தவர் ஓல்கா குர்லென்கோ. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் ஓல்காவை பாதித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இது குறித்து ஓல்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தேன். காய்ச்சல், உடல் சோர்வு முக்கிய அறிகுறியாகும். இது போன்ற அறிகுறி உங்களுக்கு தென்பட்டால் உடனே கவனியுங்கள். பாதுக்காப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருங்கள்” என்று பதிவிட்டு ஜன்னல் வழியாக இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாண்ட் நடிகரின் மனமாற்றம் - மீண்டும் சீக்ரெட் ஏஜெண்டாக அவதாரம்