ETV Bharat / sitara

'ஓ சொல்றியா... ஓ ஓ சொல்றியா...'; கவர்ச்சிப் புயலாய் மாறிய சமந்தா!

author img

By

Published : Dec 10, 2021, 9:57 PM IST

Updated : Dec 10, 2021, 10:59 PM IST

புஷ்பா திரைப்படத்தில், சமந்தா கவர்ச்சியாக நடனமாடியதாக கூறப்பட்டு வந்த 'ஓ சொல்றியா... ஓ ஓ சொல்றியா' பாடலானது இன்று (டிசம்பர் 10) தெலுங்கில் இணையத்தில் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

'ஓ சொல்றியா... ஓ ஓ சொல்றியா...'; கவர்ச்சிப் புயலாய் மாறிய சமந்தா!
'ஓ சொல்றியா... ஓ ஓ சொல்றியா...'; கவர்ச்சிப் புயலாய் மாறிய சமந்தா!

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் - இயக்குநர் சுகுமார் கூட்டணியில் 'புஷ்பா' திரைப்படம் உருவாகியுள்ளது.

திரைப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்து எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் இந்த நட்சத்திரக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. ஏற்கெனவே இப்படத்தின் 'ஸ்ரீவள்ளி', 'சாமி' பாடல்கள் வெளியாகி இளைஞர்களை குஷியாக்கியது.

கவர்ச்சி கட்டழகியான சமந்தா

இந்நிலையில் இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடலான "ஓ சொல்றியா... ஓ ஓ சொல்றியா" பாடல் இன்று (டிசம்பர் 10) தெலுங்கில் வெளியாகியுள்ளது.

கிளப் பாடல் பாணியில் உருவாக்கப்பட்ட இப்பாடலுக்கு, நடிகை சமந்தா கவர்ச்சியாக நடனம் ஆடியிருக்கிறார்.

இப்பாடலில் சமந்தா கிளாமரை அள்ளித் தெளித்து இளசுகளை தன்வசம் இழுக்க முயன்றிருக்கிறார். இப்பாடலானது வெளியான 1 மணி நேரத்திலேயே 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இதையும் படிங்க: 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' மோஷன் போஸ்டர்... திரும்பி அடிக்கும் வைகைப்புயல்...

Last Updated : Dec 10, 2021, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.