ETV Bharat / sitara

சைமா 2020 விருது: சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரை - சைக்கோ படம்

அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த "சைக்கோ" திரைப்படம் சைமா 2020-ன் ஒன்பது விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சைக்கோ
சைக்கோ
author img

By

Published : Aug 27, 2021, 11:00 PM IST

சென்னை: தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ‘சைமா 2020’ 9ஆவது பதிப்பு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில், மிஸ்கின் இயக்கிய ‘சைக்கோ’ திரைப்படம் 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த இயக்கம் - மிஷ்கின், முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் - உதயநிதி ஸ்டாலின், சிறந்த இசை - இளையராஜா, சிறந்த பாடல் - உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் - உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் (டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்), சிறந்த ஒளிப்பதிவு - தன்வீர் மிர், சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ராஜ்குமார் பிச்சுமணி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

9 விருதுகளுக்கு பரிந்துரை

இது குறித்து தாயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது, “தனது தயாரிப்பில் கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சைக்கோ’ திரைப்படம், தற்போது 9 விருதுகளுக்கு பரிந்துரையாகி மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இதற்கு, ரசிகர்கள், பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இதனை சாத்தியமாக்கிய ‘சைமா 2020’ திரை விருது குழுவினருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

சைக்கோ
சைக்கோ

இளையராஜாவுக்கு நன்றி

முக்கியமாக இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான் படத்தின் பெரு வெற்றிக்கு முக்கிய காரணம். அவருக்கும் நன்றி. தற்போது நடிகர் சிபிராஜ் நடிக்கும் 'மாயோன்' திரைப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்ததில் மகிழ்ச்சி” என்றார்.

இந்த, ‘மாயோன்’ திரைப்படம் மூலம் தற்போது திரைக்கதை எழுத்தாளராக தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூர்யாவின் தயாரிப்பு நிறுவனப் பெயரில் மோசடி: விசாரணையைத் தொடங்கிய சைபர் கிரைம் போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.