ETV Bharat / sitara

மாநாடும்... உதயநிதியும்: தடுப்பூசி விவகாரத்தில் குமுறும் தயாரிப்பாளர்! - மாநாடு ரிலீஸ்

திரையரங்கிற்குச் செல்ல கரோனா தடுப்பூசி (corona vaccine) கேட்பது உலகத்திலேயே இங்குதான் முதல்முறையாகப் பார்ப்பதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

Suresh Kamatchi
Suresh Kamatchi
author img

By

Published : Nov 22, 2021, 11:35 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே திரையரங்கங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நடமாட வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில் மாநாடு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியானது, வேண்டுமென்றே சிம்புவின் வெற்றியைத் தடுப்பதற்காகவே செய்த சதித் திட்டம் எனச் சமூக வலைதளங்களில் கருத்துகள் உலா வருகின்றன.

இது குறித்து 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில், "உலகத்திலேயே திரையரங்கிற்குச் செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாநாடு திரைப்படம் (maanaadu movie) தொடங்கிய நாள் முதல் படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. இறுதியாக இப்படம் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்தது படத்தின் வசூலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துமோ என்ற அச்சம் படக்குழுவினர் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் 'மாநாடு' படத்திற்கு முழு பார்வையாளர்கள் வரக் கூடாது என்பதற்காகவே தனிப்பட்ட விரோதம் காரணமாக உதயநிதி தரப்பின் அழுத்தத்தின்பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் மாநாடுக்கு சிக்கல் - சிம்புவைப் பழிவாங்கும் உதயநிதி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.