நடிகர்கள் நிஷாந்த், விஜய் சத்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பன்றிக்கு நன்றி சொல்லி'. பாலா அரன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப்டம்பர் 28) நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தனஞ்செயன், சி.வி. குமார், நலன் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஞானவேல்ராஜா, "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது 'அட்டகத்தி' பட நிகழ்வில் பங்கேற்றதுபோல் ஒரு பீல் கொடுக்கிறது. கல்லூரி நிகழ்ச்சிக்குச் சென்றதுபோல் இருக்கிறது.
பன்றிக்கு நன்றி சொல்லி படத்தில் பணியாற்றிய அனைவரும் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய இடத்திற்கு வருவார்கள். நானும், கார்த்தியும் கல்லூரியில் படிக்கும்போது நீங்கள், நடியுங்கள் நான் தயாரிக்கிறேன் என்றேன்.
அது தற்போது நிறைவேறியுள்ளது. இதே டீமுடன் மீண்டும் படம் தயாரிக்க உள்ளேன். எனக்கு வாழ்க்கை கொடுத்தது சிங்கமும், சிறுத்தையும்தான். அதாவது சூர்யாவின் சிங்கமும், கார்த்தியின் சிறுத்தை படமும்தான் எனக்கு லாபத்தைக் கொடுத்தது.
நலன் படத்தை நான்தான் முடக்கிவைத்துள்ளதாக வெளியில் பேசப்படுகிறது. அப்படம் அடுத்த மாதம் ஆரம்பமாகிறது. அனைவருக்கும் நன்றி" என்றார்.
இதையும் படிங்க: இணையத்தில் வரவேற்பை பெறும் டாக்டர் தீம் மியூசிக்