1996இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக 'இந்தியன் 2' உருவாகிவருகிறது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில், நடிகர்கள் கமல், சித்தார்த், நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், விவேக், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, நெடுமுடிவேனு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பில்லா 2, துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜாம்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் லேபில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. தற்போது ஆந்திரா ராஜமுந்திரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இந்தியன் படத்தின் தயாரிப்பாளார் ஏ.எம். ரத்தினத்திடம்தான் இந்தியன் படப்பெயரின் காப்புரிமை இருக்கிறது. எனவே அவரையும் இந்தியன் 2வில் இணைந்து பணியாற்ற லைகா நிறுவனமும் படக்குழுவும் ஆர்வம் காட்டிவந்தது. ஆனால் ரத்தினம் இந்தியன் 2வில் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் காட்டவில்லை.
ஏ.எம். ரத்தினம் தற்போது தெலுங்கு பவர் ஸ்டாரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாணை வைத்து இயக்க இருக்கும் புதிய படத்தின் தயாரிப்பில் கவனம் செலுத்திவருகிறார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் முகாமிட்டுள்ள 'இந்தியன் 2' படக்குழு