ETV Bharat / sitara

கணவனை கண்கலங்கவைத்த பிரியங்கா - இயக்குநர் என்ன சொன்னார் தெரியுமா? - shonali bose

பிரியங்கா சோப்ரா நடிப்பைப் பார்த்து அவரது காதல் கணவர் நிக் ஜோனஸ் கண்கலங்கிய நெகிழ்ச்சியான தருணம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

the sky is pink
author img

By

Published : Sep 9, 2019, 2:29 PM IST

சோனாலி போஸ் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா, ஃபரான் அக்தர், சாய்ரா வாசிம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ (The Sky Is Pink). பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கு நான்கு நாட்கள் முன்பு, இதன் இறுதிக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சியில் பிரியங்கா நடிப்பைப் பார்த்து நிக் ஜோனஸ் கண்கலங்கியிருக்கிறார்.

the sky is pink
பிரியங்கா - நிக்

இதுகுறித்து இயக்குநர் சோனாலி, "ஷூட்டிங் முடியும் வேளையில் அங்கு வரும்படி பிரியங்காவின் காதலர் நிக் ஜோனஸுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் ஜோனஸ், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே வந்து ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்திருக்கிறார். பிரியங்கா அப்போது உணர்வுப்பூர்வமான காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென எங்கள் செட்டில் ஒரு தும்மல் சத்தம், திரும்பிப் பார்த்தால் நிக் ஜோனஸ் கண்கலங்கியபடி நின்றிருந்தார்" என தெரிவித்தார்.

the sky is pink
தி ஸ்கை இஸ் பிங்க்

இந்தச் சம்பவம் பற்றி பிரியங்கா, "உன் கணவன கண்கலங்க வச்சுட்ட, இது மிகச் சிறந்த காட்சியா இருக்கும்" என இயக்குநர் சோனாலி கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஜூஹி சதுர்வேதி எழுத்தில் உருவாகியுள்ள ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.