சென்னை: இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ளார். இதில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க ரவீந்திரன் தயாரித்துள்ளார்.
படத்தில், நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ’ஹாஸ்டல்’ எனப் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தொடர்ந்து விறுவிறுப்பாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் கூடுதல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ’உங்களுடன் நெருக்கமாக, இதை எல்லாம் செய்தேன்?’ - ஏ.எல். விஜய் குறித்து கங்கனா