'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' என்ற பாடலில் பிரியா பிரகாஷ் வாரியர் காதல் பார்வையில் காதலனை பார்த்து கண்ணடித்த காட்சி இளைஞர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு பிரபலமானார். அவர் கண்ணடிக்கும் வீடியோ ராகுல் காந்தியோடு ஒப்பிட்டு வைரலானது. இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த பிரியா வாரியர் ஒரே நாளில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி வலைதளத்தில் முதலிடத்தை பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் நடித்த 'ஸ்ரீதேவி பங்களா' என்ற பாலிவுட் படத்தின் டீசர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஸ்ரீதேவி மரணத்தை கேலிக்குள்ளாக்குவதாக, அவரது கணவர் போனி கபூர் கருத்து தெரிவித்தார். இப்படம் இன்று வரை வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வம்புக்கு இழுப்பார். இந்நிலையில், ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்துடன் நெருங்கியபடி ரொமாண்டிக்காக முத்தம் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் சினு சித்தார்த் பிரியா வாரியருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்க செல்வதுபோல் வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்கும் காட்சி ரசிகர்களை திக்குமுக்காடவைத்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், பிரியா வாரியர்க்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்துக்காதீங்க, இந்த வீடியோ இப்ப தேவையா என விமர்சித்தாலும், ஒரு சிலர் பாராட்டி வருகின்றனர்.