ETV Bharat / sitara

கமலின் அன்பே சிவத்தை மிஞ்சிய பிரேம்ஜியின் ட்விட்டர் பதிவு - பிரேம்ஜிக்கு திருமணம்

வித்தியாசமான, விநோதமான ட்விட்களால் அவ்வப்போது ஆஜராகி ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி வரும் நடிகர் பிரேம்ஜி, இன்று ஒரு ட்விட்டுடன் ரசிகர்களுக்கு கருத்து கூறியுள்ளார்.

Actor premgi latest tweet
நடிகர் பிரேம்ஜி
author img

By

Published : Jun 12, 2020, 12:07 PM IST

சென்னை: கமலின் அன்பே சிவம் படத்தில் நகைச்சுவையாகக் கூறப்பட்ட கருத்தை மிஞ்சும் விதமாக நடிகர் பிரேம்ஜி ட்விட்டரில் புகைப்படத்துடன் இரண்டு பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

திரைப்பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஒவ்வொரு பதிவுகளும், புகைப்படங்களும் தங்களை கவரும் பட்சத்தில், அதைப் பகிர்ந்து வைரலாக்கும் வேளையில் ரசிகர்கள் ஈடுபடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக டாப் நடிகர்கள், நடிகைகள் புகைப்படமோ அல்லது பதிவோ பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களிலிருந்து அதை ட்ரெண்டாக்குவதற்கு என தனி கூட்டமே உள்ளது.

பாலிவுட் சினிமாவுக்கு சல்மான் கான் போல், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 40 பிளஸ் வயதாகியும் பேச்சுலராகவே இருக்கும் பிரேம்ஜி, அவ்வப்போது வித்தியாசமான, விநோதமான ட்விட் பதிவுகளில் ஆஜராகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அப்படியொரு ட்விட் பதிவை இன்று (ஜூன் 12) அவர் பகிர்ந்துள்ளார். தனது மொபைல் ஸ்கீரினில் நள்ளிரவு, 00:12 மணி, அதிகாலை 4:44 மணி ஆகிய நேரங்களை புகைப்படத்துடன் பகிர்ந்து, 4+4+4=12, 12:12, ஜூன் 12ஆம் தேதி வந்திருப்பதாக கூறி தனது குறும்புத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தில் ரயில் நிலையம் ஒன்றில் நடிகர் மாதவன், வரவிருக்கும் ரயில் எவ்வளவு நேரம் நிற்கும் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்பார். அதற்கு அவர், 'டூ டு டூ டூ டூ டு' என்று வித்தியாசமாக பதிலளிப்பார். இதைக் கேட்டு குழம்பிப்போய் நிற்கும் மாதவனிடம், 1:58 மணியிலிருந்து 2.02 மணி வரை ரயில் நிற்கும் என்பதைத்தான் அவர் இப்படிச் சொன்னதாக கமல் விளக்குவார்.

அதேபோல், தற்போது பிரேம்ஜி, கமல் கூறியதை மிஞ்சும் விதமாக இருவேறு நேரங்களே குறிப்பிட்டு, ஜூன் 12ஆம் தேதி வருவதாக காட்டியிருப்பதற்கு, சீக்கரம் கல்யாணம் பன்னிக்கோங்க என ரசிகர்கள் அவர் பாணியிலேயே பல்வேறு குறும்புத்தனமான ரியாக்‌ஷன்களுடன அந்த ட்விட்டுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்.

ஏற்கனேவே, ஜூன் 8ஆம் தேதியன்று 22:22 மணியுடன் புகைப்படத்தை பகிர்ந்து குறும்புத்தனத்தை வெளிபடுத்தியிருந்த பிரேம்ஜி, இரண்டு நாள்களுக்குப் பிறகு மீண்டும் இதனை தொடர்ந்திருக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.