ETV Bharat / sitara

அறுவை சிகிச்சை முடிந்தது - நன்றி தெரிவித்த பிரகாஷ்ராஜ் - பிரகாஷ்ராஜ் அறுவை சிகிச்சை முடிந்தது

ஹைதராபாத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து பிரகாஷ்ராஜ் நலமாக இருக்கிறார்.

prakash Raj surgery over - Thanked his fans

author img

By

Published : Aug 11, 2021, 10:24 PM IST

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்துவருபவர் பிரகாஷ்ராஜ். இவர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கி படப்பிடிப்பிற்கு சென்று வந்தார். இந்த சூழலில், நேற்று முன்தினம் அவர் வீட்டில் வழுக்கி விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான முதற்கட்ட சிகிச்சையை முடித்துக்கொண்ட அவர், ஹைதராபாத்தில் உள்ள தனது மருத்துவ நண்பரை சந்தித்து அடுத்தகட்ட சிகிச்சையை எடுத்துக்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார். அதன்படி விரைவாக ஹைதராபாத் விரைந்தார்.

ஹைதராபாத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமாக இருக்கிறார். இதுகுறித்து பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், தி டெவில் இஸ் பேக். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. என் இனிய நண்பன் டாக்டர். குருவாரெட்டிக்கும், எனக்காக பிரார்த்தித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மழை பிடிக்காத மனிதன்: விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் கூட்டணி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.