ETV Bharat / sitara

பிரபு, விஜயகாந்த், சரத்குமார் படத் தயாரிப்பாளர் திடீர் மரணம் - திரையுலகினர் இரங்கல்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு மாரடைப்பால் மரணமடைந்தார்.

kb films
kb films
author img

By

Published : Jan 2, 2021, 12:59 PM IST

திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.பி.பிலிம்ஸ் உரிமையாளர் பாலு.

இவர் சின்னத்தம்பி, பாஞ்சாலங்குறிச்சி, ஜானகிராமன், உள்ளத்தில் நல்ல உள்ளம், பாண்டித்துரை, ஆகா என்ன பொருத்தம் உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை கோளாறு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கரோனா பாதிப்பால் கடந்த ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், பாலு இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

பாலுவின் மறைவுக்கு திரைத்துரையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த தயாரிப்பாளர் பாலுவின் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பாட்ஷா ரஜினி பட வில்லன் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.