டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மிஷன் இம்பாசிபிள்'. இந்தப் படத்தின் வரிசையிஸ் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக 2018ஆம் ஆண்டு ’மிஷன் இம்பாசிபிள்: ஃபால் அவுட்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குயரி, டாம் க்ரூஸை வைத்து 'மிஷன்: இம்பாசிபிள் 7' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை பாரமாவுண்ட் தயாரித்து வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவில் நடைப்பெற்று வந்த 'மிஷன்: இம்பாசிபிள் 7' படப்பிடிப்பு முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 'மிஷன்: இம்பாசிபிள் 7' படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ளதாக சமீபத்தில் சமூகவலைதளத்தில் செய்திகள் வைரலாக பரவியது. 'ராதே ஷயாம்' படத்திற்காக இத்தாலியில் நடைப்பெற்ற படப்பிடிப்பின்போது பிராபஸூம் கிறிஸ்டோபர் மெக்குயரியும் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்தன.
-
While he‘s a very talented man, we’ve never met.
— Christopher McQuarrie (@chrismcquarrie) May 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Welcome to the internet. https://t.co/mvVFP6N4zV
">While he‘s a very talented man, we’ve never met.
— Christopher McQuarrie (@chrismcquarrie) May 26, 2021
Welcome to the internet. https://t.co/mvVFP6N4zVWhile he‘s a very talented man, we’ve never met.
— Christopher McQuarrie (@chrismcquarrie) May 26, 2021
Welcome to the internet. https://t.co/mvVFP6N4zV
இது தொடர்பாக 'மிஷன்: இம்பாசிபிள் 7' பட கிறிஸ்டோபர் மெக்குயரியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர், ”இந்திய நடிகர் பிரபாஸ் 'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தில் நடிப்பது உண்மையா” எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கிறிஸ்டோபர் மெக்குயரி, "அவர் மிகத் திறமையானவராக இருந்தாலும் நாங்கள் இதுவரை சந்தித்ததில்லை. இணையத்துக்கு உங்களை வரவேற்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் 'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தில் பிரபாஸ் நடிப்பாத வெளியான செய்தி வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.