உலக அளவில் புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில் 25வது படம், 'நோ டைம் டூ டை' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜமைக்கா, நார்வே, யுகே-விலுள்ள பைன்வுட் ஸ்டூடியோஸ், லண்டன் ஆகிய இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக ராமி மாலெக் நடிக்கிறார்.
இந்த நிலையில், தெற்கு இத்தாலியில் அமைந்துள்ள மடேரா நகரில் கடந்த சில நாட்களாக 'நோ டைம் டூ டை' படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்குள்ள தெருக்களில் கார், பைக் என பரபர சேஸிங் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதில் டேனியல் கிரேக் பங்கேற்று ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் லியா சிதோ, நியோமி ஹாரிஸ், பென் வின்ஷா, ரால்ப் ஃபைன்ஸ் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்பை வேலையை விடுத்து ஜமைக்காவில் அமைதியாக வாழ்ந்து வரும் ஜேம்ஸ் பாண்ட்-ஐ தேடி வரும் சிஐஏ மற்றும் பழைய நண்பரின் வேண்டுகோளை ஏற்று, கடத்தப்பட்ட விஞ்ஞானி ஒருவரை மீட்கும் பணியில் களமிறங்குகிறார். இதன் பின்னர் வழக்கான அதிரடி ஆக்ஷன், சாகசங்கள், ரொமான்ஸ் என பாண்ட் படங்களுக்கே உண்டான அனைத்தும் கலந்த கலவையாக 'நோ டைம் டூ டை' படத்தின் கதை அமைந்துள்ளது.
-
ICYMI Celebrate #JamesBondDay with the first poster for #NoTimeToDie #Bond25 pic.twitter.com/fnONEWdGzh
— James Bond (@007) October 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ICYMI Celebrate #JamesBondDay with the first poster for #NoTimeToDie #Bond25 pic.twitter.com/fnONEWdGzh
— James Bond (@007) October 5, 2019ICYMI Celebrate #JamesBondDay with the first poster for #NoTimeToDie #Bond25 pic.twitter.com/fnONEWdGzh
— James Bond (@007) October 5, 2019
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் யுகே-இல் ஏப்ரல் 3, 2020ஆம் ஆண்டும், அமெரிக்காவில் ஏப்ரல் 8, 2020லும் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு வழிவிடும் நேரம் இதுதான் - புதிய பாண்ட் குறித்து பழைய பாண்ட்