ETV Bharat / sitara

நட்டி - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லராக உருவாகும் 'வெப்'! - வெப் திரைப்படம்

'சதுரங்க வேட்டை' நட்டி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான 'வெப்',படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

நட்டி - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லராக உருவாகும் 'வெப்'..!

author img

By

Published : Jan 25, 2022, 8:05 PM IST

வேலன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் 'வெப்'.

இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.

4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத்தும் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

'எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்' படத்தின் நாயகி ஷாஸ்வி பாலா, 'முந்திரிக் காடு' & 'கண்ணை நம்பாதே' படங்களில் நடித்த சுபப்ரியா, மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், முரளி, தீப்ஸிகா, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கார்த்திக் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

காட் பாதர், மோகன்தாஸ் ஆகியப் படங்களில் பணியாற்றிய அருண் சங்கர் கலை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.

3 பாடல்கள் உள்ள இப்படத்தில் சாண்டி மாஸ்டர், சிவசங்கர் மாஸ்டர் மற்றும் ஹரிஷ் கார்த்திக் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.

அருண் பாரதி, ஆர்ஜெ விஜய் மற்றும் ஜெகன் கவிராஜ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டு வெளியேறத்துடிக்கும் பூச்சிகளின் போராட்டத்தைப் போன்று இந்தக் கதை உருவாகி உள்ளதால், அதற்குப் பொருத்தமாக 'வெப்' என டைட்டில் வைத்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு, கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாசாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாரூன்.

கோவா உள்ளிட்டப் பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தாலும் கரோனா பரவல் காரணமாக, சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:7ஆவது இயக்குநர் சுசீந்திரன் - D.இமான் கூட்டணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.