சிம்பு, வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'போடா போடி'. விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான இப்படத்தை பதம் குமார் தயாரித்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் சிம்பு நடிப்பிலேயே உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்க உள்ளார். இயக்குநர் யார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் முதற் பாகத்தின் தொடர்ச்சியாக அல்லாமல் புதிய கதையாகவும் முதல் பாகத்தை இணைக்கும் கதையாகவும் இருக்கும். இத்திரைப்படத்தை லண்டனில் படமாக்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... சிம்புவிற்கு திருமணம் ஆக வேண்டி முட்டிப்போட்டு மலை ஏறிய ரசிகர்கள்!