ETV Bharat / sitara

’ஒரு கனவு போல் உணர்கிறேன்’ - மகனை அறிமுகம் செய்த ஸ்ரேயா கோஷல் - பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்

மும்பை: பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் சில நாள்களுக்கு முன் பிறந்த தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Shreya Ghoshal
Shreya Ghoshal
author img

By

Published : Jun 2, 2021, 9:02 PM IST

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் ஸ்ரேயா கோஷல். இவரின் வசீகரக் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் 2015ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்பும் ஸ்ரேயா கோஷல் தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், அனிருத் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் தான் கருவுற்றிருப்பதாக அறிவித்த ஸ்ரேயா கோஷல், மே 22ஆம் தேதி ஆண் குழந்தையைப் பெற்தெடுத்தார்.

  • Introducing- ‘Devyaan Mukhopadhyaya’
    He arrived on 22nd May & changed our lives forever. In that first glimpse as he was born he filled our hearts with a kind of love only a mother, a father can feel for their child. Pure uncontrollable overwhelming love❤️ @shiladitya pic.twitter.com/MbD386CdqC

    — Shreya Ghoshal (@shreyaghoshal) June 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், ஸ்ரேயா கோஷல் தனது மகன், கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "தேவ்யான் முகோபாத்யயாவை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மே 22ஆம் தேதி எங்கள் குடும்பத்திற்கு வந்த அவர் எங்களுடைய வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டார்.

அவர் பிறந்தவுடன் பார்த்த முதல் பார்வையிலேயே எங்கள் இதயங்களை தன் அன்பால் நிரப்பினார். ஒரு தாய், தந்தையால் மட்டுமே தங்கள் குழந்தையை உணரமுடியும் என்பதை நான் தெரிந்துகொண்டேன். தூய்மையான அன்பு கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய வரம். இதனை ஒரு கனவு போல் உணர்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.