ETV Bharat / sitara

பட்டைய கிளப்பும் 'ஜிகிடி கில்லாடி' - தனுஷ் வெடிக்கும் 'பட்டாஸ்' - அனிருத் குரலில் ஜிகிடி கில்லாடி

தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'பட்டாஸ்' திரைப்படத்தில் அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் 'ஜிகிடி கில்லாடி' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

pattas
pattas
author img

By

Published : Dec 27, 2019, 4:32 PM IST

'கொடி' திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணி இரண்டாவது முறை இணையும் படம் 'பட்டாஸ்'. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்ஸதா நடித்துள்ளார். மேலும், ஸ்நேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

'விஸ்வாசம்' படத்திற்குப் பிறகு சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் முதல் சிங்கிளான 'சில் ப்ரோ', இரண்டாவதாக வெளியான 'மொரட்டு தமிழன்டா' இரண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது, மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் 'ஜிகிடி கில்லாடி' சிங்கிள் பாடல் ஒரே இரவில் சக்கைப்போடு போட்டுவருகிறது.

Pattas
விவேக்-மெர்வின் உடன் அனிருத்

இது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறுகையில், "அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கும் மேலான சகோதரர் போன்றவர். அவரை எங்கள் இசையில் பாடவைப்பது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தனுஷ்-அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றிக் கூட்டணி என்பதை இந்தப் பாடலின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது.

'பட்டாஸ்' படத்தில் கடந்த 8 முதல் 9 மாதங்களாக நாங்கள் பணிபுரிந்துவருகிறோம். நானும் மெர்வினும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தோம். நாங்கள் செய்யும் பாடல்களில் புதுமை, நேர்த்தி, பாடலுக்குரிய நியாயம் ஆகியவற்றை உண்மையாகத் தர உழைத்தோம். எந்த இடத்திலும் இது எங்களது முந்தைய பாடல்களைப் பிரதிபலித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

'பட்டாஸ்' சினிமா பயணத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இப்போது மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...

நஸ்ரியா கலக்கல் புகைப்படத்தொகுப்பு

Intro:பட்டைய கிளப்பும் “ஜிகிடி கில்லாடி” பாடல்.Body:சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் இயக்கியுள்ள “பட்டாஸ்” . ஜனவரி 16 வெளியாகும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்
இந்த படத்தின் முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பெற்ற நிலையில் தற்போது, மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல் ஒரே இரவில் பெரு வெற்றியடைந்துள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியுள்ளது இது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறுகையில்,

அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கு மேலான சகோதரர் போன்றவர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தனுஷ் அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றி கூட்டணி என்பதை இந்த பாடலின் வென்றியை மீண்டும் நிரூபித்துள்ளது.

“பட்டாஸ்” படத்தில் கடந்த 8 முதல் 9 மாதங்களாக நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். நானும் மெர்வினும் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம் நாங்கள் செய்யும் பாடல்களில் புதுமையையும், நேர்த்தியையும், பாடலுக்குரிய நியாயத்தையும் உண்மையாக தர உழைத்தோம். எந்த இடத்திலும் இது எங்களது முந்தைய பாடல்களை பிரதிபலித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். “பட்டாஸ்” எங்கள் சினிமா பயணத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.
Conclusion: இப்போது மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.