சென்னை: கவிஞர் பா.விஜய் சினிமாவில் பாடல் எழுதுவது மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். மேலும் ஸ்ட்ராபெர்ரி, ஆருத்ரா ஆகிய படங்களை இயக்கி நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தற்போது நடிகர் பிரபுதேவாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை எம்எஸ் மூவிஸ் சார்பில் முருகன் தயாரிக்கிறார். மஹிமா நம்பியார், கலையரசன் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தொகுப்பு சான் லோகேஷ் மற்றும் இசை கணேசன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் பா.விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கப்பாதை: மீண்டும் சிவகார்த்திகேயன் - இமான் கூட்டணி!