சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா.ரஞ்சித். அதன்பிறகு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அது ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
அதனை தொடர்ந்து ஆர்யாவை வைத்து இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், தற்போது காளிதாஸ், அசோக் செல்வன், துஷாரா விஜயன் நடிக்கும் நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், மகான் படத்தை முடித்துவிட்டு இந்த படத்திற்கு விக்ரம் கால்ஷீட் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்க்காக தனுஷ் மாற்றிக்கொண்ட விஷயம்!