ETV Bharat / sitara

சினிமாவுக்கு வர விடாமல் பலரைத் தடுத்திருக்கிறேன் - பா. இரஞ்சித் - குதிரைவால் திரைப்படம்

சினிமாவில் நிறைந்திருக்கும் பாதகங்களைக் கூறி, பலரை நான் சினிமாவுக்குள் வர விடாமல் தடுத்திருக்கிறேன் என இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா. இரஞ்சித் பேசியது தொடர்பான காணொலி
பா. இரஞ்சித் பேசியது தொடர்பான காணொலி
author img

By

Published : Feb 15, 2022, 10:29 PM IST

யாழி, நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுத்தாளர் ஜி. ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.

கலையரசன் நாயகனாகவும், அஞ்சலி பாட்டீல் நாயகியாகவும் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி 14) சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. பா. இரஞ்சித் இசைத் தொகுப்பை வெளியிட, ‘குதிரைவால்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

தன்னிச்சை படைப்பாளிகள் மீது நம்பிக்கை

பா. இரஞ்சித் பேசியது தொடர்பான காணொலி

அப்போது பா. இரஞ்சித் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு இது. சினிமாவுல பல வகைகள் இருக்கு, அதைப் பார்த்துதான் சினிமாவுக்கே நான் வந்தேன். பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களைப் பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான்.

ஆனால், அதை ரசித்து மிக சந்தோஷமாகத்தான் செய்துகொண்டிருக்கிறேன். அது சமூகத்தில் நிறைய கேள்விகளை உருவாக்குகிறது என்றும் நம்புகிறேன். தத்தோஷ்கி எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவருடைய படங்களைப் பார்த்து மெய் மறந்து நின்றிருக்கிறேன்.

அதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. ஆனால், அவருடைய படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுபோன்ற ஒரு ரசிகராகத்தான் நான் மனோஜை பார்க்கிறேன். ஜெனி மூலமாக மனோஜ், அவருடைய குழுவைச் சந்தித்தேன். அப்போது ராஜேஷ் நான்கு மணி நேரம் கதை சொன்னார்.

நான் புத்தகத்தைப் படித்துவிடுகிறேன் என்று கேட்டேன். அதைக் கொடுத்தார்கள். ஆனால் அது ஐந்நூறு பக்கங்கள் இருந்தன. பிறகு மனோஜ் இயக்கிய குறும்படம் ஒன்றைப் பார்த்தேன், மிகச் சிறப்பாக இருந்தது.

அந்தக் குறும்படத்தின் மேக்கிங் போன்ற அம்சங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்ததோடு, மனோஜ் மீது மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. எனக்குப் பொதுவாகத் தன்னிச்சை படைப்பாளிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது.

எல்லோருக்கும் லாபமல்ல...

அவர்களால்தான் புதிதாகச் சொல்ல முடியும், ரசிகர்களுடைய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள். அதுபோலத் தான் குதிரைவால் படத்தை நான் பார்த்தேன். குதிரைவால் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. சினிமா நிரந்தர வருமானம் அல்லது லாபம் இல்லாத தொழிலாக இருக்கிறது.

சினிமா மிகப்பெரிய லாபம் கொடுக்கும் தொழில்தான். ஆனால், எல்லோருக்கும் லாபம் கொடுக்காது. இதை நான் எல்லோரிடமும் சொல்வதுண்டு. இப்படி நான் சினிமாவுக்கு வர விரும்பிய பலரைத் தடுத்திருக்கிறேன். அப்படித்தான் விக்னேஷிடம் சினிமாவில் பாதகங்களைக் கூறினேன். ஆனால், அதைக் கேட்ட பிறகும் அவர் படம் தயாரிக்கத் தயாராகவே இருந்தார்” என்றார்.

இதையும் படிங்க: அசரவைக்கும் அழகுப்பதுமை அஞ்சனா ரங்கன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.