இயக்குநர் பா. ரஞ்சித், 'காலா' படத்தின் மூலம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து பழங்குடியின போராளி பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தையும், வட சென்னையில் நடக்கும் கிக்பாக்ஸிங் பற்றிய கதையை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பாளராக 'பரியேரும் பெருமாள்' படத்தை தயாரித்து வெற்றி கண்டு, இந்த ஆண்டு இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்தது. அப்போது, "நாங்கள் வெறுமனே திரைப்படங்களை கொடுப்பதற்காக மட்டும் தயாரிப்பதில்லை, இவற்றை படைக்கவே முடியாது என மக்கள் நினைக்கிற படத்தையும் படைக்க வந்துள்ளோம். தற்போது அசுரன் போன்ற திரைப்படங்களை காண மிகவும் மகிழ்வாக உள்ளது. அதன் வெற்றியும் பலருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. அசுரன் திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றி மிகவும் முக்கியமானது, கைதி திரைப்படத்தின் வெற்றியும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது " என்று கூறினார்.
இதையும் படிங்க: அஜித் படத்தில் நடிக்க மறுத்தாரா அரவிந்த் சாமி?