மலையாள நடிகை ஓவியா 2010இல் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் அவர் நடிக்கத் தொடங்கினார்.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சிவாவுக்கு ஜோடியாக கலகலப்பு, விமலுக்கு ஜோடியாக களவாணி ஆகிய படங்களில் ஓவியா நடித்தார்.
இதையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார் ஓவியா. அந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழைப் பயன்படுத்த தவறிவிட்டதால், அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது.
இதனால் நடிகை ஓவியா வெப் தொடர் பக்கம் திரும்பியுள்ளார். மெர்லின் என்னும் வெப் தொடரில் அவர் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் நாளை (ஜூன் 5) யூ-ட்யூபில் வெளியாக உள்ளது. ஏற்கனவே சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற முன்னணி நடிகைகள் வெப் தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகை ஓவியாவும் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: ஓவியாவின் லேட்டஸ் க்யூட் போட்டோ தொகுப்பு!