பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிப்ரவரி 14ஆம் தேதி சென்னை வந்திருந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற பதிவு ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்தப் பதிவை ஆதரித்து நடிகை ஓவியாவும், தனது ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி #GoBackModi என பதிவிட்டிருந்தார்.
- — Oviyaa (@OviyaaSweetz) February 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Oviyaa (@OviyaaSweetz) February 18, 2021
">— Oviyaa (@OviyaaSweetz) February 18, 2021
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து பதிவிட்ட நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக வழக்கறிஞரான அலெக்சிஸ் சுதாகர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதில் நடிகை ஓவியாவின் பதிவு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், பிரதமரை அவமதிக்கும் வகையிலும் உள்ளதாகவும், நடிகை ஓவியா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்ஹிந்த், கருத்து சுதந்திரம் என ஒன்றை வரியில் மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் தமிழ்நாடு வருகை: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackModi, #TNWelcomesPMModi