'கோடிட்ட இடத்தை நிரப்புக' படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி, நடித்த 'ஒத்த செருப்பு' திரைப்படம், 2019ஆம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தில் பார்த்திபன் ஒற்றை ஆளாக நடித்து புதிய முயற்சியை மேற்கொண்டார். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே தோன்றும், இந்தப் படம் உலக அளவில் வெளியான சோலோ கேரக்டர் படங்களில் 13ஆவது படமாகும்.
இந்நிலையில், ஒத்த செருப்பு திரைப்படம் இயக்குநர் பார்த்திபனால் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. நடிகர் அபிஷேக் பச்சன் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆக.12) சென்னையில் தொடங்கியுள்ளது.
முன்னதாக 2020ஆம் ஆண்டு ஒத்த செருப்பு திரைப்படம் டொராண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மூன்று விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் நட்டியுடன் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்!