ஜேம்ஸ் பாண்ட் சீரிஸில் 2008ஆம் ஆண்டு வெளியான 'குவாண்டம் ஆஃப் சோலஸ்' படத்தில் நடித்தவர் ஓல்கா குர்லென்கோ. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதித்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது தனக்கு முழுமையாக குணமடைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நான் முழுமையாக குணமடைந்துவிட்டேன். ஒரு வாரமாக நான் மிகவும் மோசமான நிலையை உணர்ந்தேன். பெரும்பாலும் படுக்கையில் இருந்தேன், தூங்கினேன். அதிக காய்ச்சலும் தலை வலியும் இருந்தது. இரண்டாவது வாரம் காய்ச்சல் நீங்கியது. ஆனால் லேசான இருமல் இருந்து வந்தது. இரண்டாவது வாரம் முடிவில் இருமல் குறைந்துவிட்டது. இந்த இருமலும் சீக்கிரம் நின்றுவிடும் என நம்புகிறேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்.
இப்போது நான் பல பயனுள்ள விஷயங்களை செய்து வருகிறேன். அதுமட்டுமல்லாது எனது மகனுடன் அதிக நேரம் செலவு செய்ய முடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.