ETV Bharat / sitara

மன்னிப்பு வார்த்தை பயன்படுத்தி உருவாகியுள்ள '4 sorry' - ட்ரெய்லர் வெளியீடு! - ட்ரெய்லர்

வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் மன்னிப்பு என்னும் வார்த்தையை மையப்படுத்தி சமூக விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘4 sorry’ ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

sorry
sorry
author img

By

Published : Oct 23, 2021, 6:14 PM IST

சக்திவேல் இயக்கத்தில், ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘4 sorry’. இப்படத்தில் ஜான் விஜய்யுடன் காளி வெங்கட், டேனியல், ரித்திகா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சேஃப்டி ட்ரீம் புரொடக்ஷன்ஸ், ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ், கார்த்திக் அசோக் புரொடக்ஷன்ஸ், தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ‘4 sorry’ படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

‘4 sorry’ படம் குறித்து படக்குழு கூறுகையில், "மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் மன்னிப்பு என்னும் வார்த்தையை மையப்படுத்தி சமூக விழிப்புணர்வுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மக்களின் உளவியல் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் விதத்தில் காட்சிகள் யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு வெவ்வேறு சந்தர்பங்களில் நடக்கும் கதைகள் படமாக்கப்பட்டுள்ளது" என்றனர்.

இதையும் படிங்க: கோதாவரிக்கு இன்று பிறந்தநாள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.