ETV Bharat / sitara

களமிறங்கிய #தளபதி64 குழு! - பூஜையுடன் ஷுட்டிங் தொடக்கம் - விஜய் படத்தில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என முற்றிலும் புதிய கூட்டணியுடன் தளபதி விஜய்யின் புதிய படம் ஷுட்டிங் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

தளபதி64 படம் பூஜையுடன் தொடக்கம்
author img

By

Published : Oct 3, 2019, 12:09 PM IST

தளபதி விஜய் நடித்துள்ள புதிய படமான 'பிகில்' தீபாவளி ட்ரீட்டாக வரவுள்ளது. இந்தப் படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

மாநகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தில் அவரது தங்கையாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், தளபதி64 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில், விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துகொண்டனர்.

#Thalapathy64 begins with pooja today
தளபதி64 படம் பூஜையுடன் தொடக்கம்

இதையடுத்து படத்தின் ஷுட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 2020ஆம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Intro:Body:

விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என முற்றிலும் புதிய கூட்டணியுடன் தளபதி விஜய்யின் புதிய படம் ஷுட்டிங்கு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. 

சென்னை:  விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.