ETV Bharat / sitara

#THALA60PoojaDay - 4 மணிக்குத் தொடங்குகிறது அஜித் பட பூஜை!

author img

By

Published : Oct 18, 2019, 1:49 PM IST

தல 60 திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#THALA60PoojaDay

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இரண்டு படங்களில் அஜித்தை புக் செய்தார். இந்த இரண்டு படங்களையும் ஹெச். வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டது. அதன்படி முதல் படமாக 'பிங்க்' படத்தை ரீமேக் செய்து, 'நேர்கொண்ட பார்வை' படத்தை ஹெச்.வினோத் இயக்கினார். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.

Ajay devgan and boney kapoor
Ajay devgan and boney kapoor

தற்போது 'தல' அஜித்தின் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக போனி கபூரும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் சென்னை வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சென்டிமென்ட் காப் ஸ்டோரியாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் #THALA60PoojaDay என அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தப் படத்துக்கு 'வலிமை' எனப் பெயரிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பூஜை மாலை 4 மணிக்குத் தொடங்குகிறதாம்.

Intro:Body:

Thala 61 poojai update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.