ETV Bharat / sitara

#NKP - முரட்டு வக்கீலின் தாண்டவ முகம் 'எல்லாம் அவன் செயல்' - ஆர்கே

தல அஜித் வழக்கறிஞராக நேர்கொண்ட பார்வையோடு வரவுள்ள நிலையில் அதையொத்த 'எல்லாம் அவன் செயல்' பற்றியும், அப்படத்தின் நாயகன் ஆர்.கே.வின் சாதூர்ய செயல்பாடுகள், எதிரிகளை எமலோகம் அனுப்புதல் குறித்தும் வாசகர்களின் பார்வைக்காக...

Rk
author img

By

Published : Aug 5, 2019, 3:49 PM IST

நடிகர் அஜித் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வழக்கறிஞராக தோன்றும் 'நேர்கொண்ட பார்வை' வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியாகிறது. படம் வெளியாவதற்கு முன்பே அஜித் ரசிகர்கள் படத்தின் ப்ரோமோ காட்சிகளை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

அதேபோன்று ரங்கராஜ் பாண்டே தனது வாதத்தால் அபிராமியை 'சரி சரி சரி' எனக் கத்தவைத்து நீதிமன்றத்தை அதிரவைக்கும் காட்சிகள் தற்போது பிரபலமாகிவருகிறது. இதனால் நாளுக்கு நாள் விதவிதமான ப்ரோமோ மூலம் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்துள்ளது.

எல்லாம் அவன் செயல் பட போஸ்டர்
எல்லாம் அவன் செயல்

இந்நிலையில், இதே பாணியில் நீதிமன்ற பின்னணியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'எல்லாம் அவன் செயல்' படத்தை பற்றிய ரீ-வைண்ட். அதில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளை ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பி அப்படத்தைப் பற்றி நினைவுப்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றனர். ஆனால், வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சிகள் மட்டும் இப்படத்தை காப்பாற்றவில்லை. அனல் பறக்கும் வசனங்களும், ஆக்ஷன் காட்சிகளும் விறுவிறுப்பை தந்தன.

வக்கீலாக காவு வாங்கும் ஆர்கே
வக்கீலாக காவு வாங்கும் ஆர்கே

வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த ஆர்.கே. முதன் முறையாக 'எல்லாம் அவன் செயல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மலையாளத்தில் 'சிந்தாமணி கொலை கேஸ்' படத்தின் மறு உருவாக்கம்தான் 'எல்லாம் அவன் செயல்'. தமிழிலும் ஷாஜி கைலாஸே இயக்கியிருக்கிறார். இப்படத்தில் முரட்டு வக்கீல் வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் ஆர்கே..

மருத்துவக் கல்லூரி மாணவியான சிந்தாமணியின் மர்ம மரணத்தைத் துப்பு துலக்கி, உண்மையான குற்றாவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதுதான் கதை.

நடிகர் ஆர்கே
நடிகர் ஆர்கே

புத்திசாலியான குற்றவியல் வழக்கறிஞர் எல்.கே. குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்கள், மேல் நீதிமன்றத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, வெளியே வந்துவிடுகிறார்கள்.

எனவே, அத்தகைய குற்றவாளிகளுக்காக எல்.கே. வாதாடி, அவர்களைச் சட்டப்படி வெளியே கொண்டுவருகிறார். அடுத்த நாளே, எவரும் அறியாமல் அவர்களை தீர்த்துக் கட்டுகிறார். இந்த நிலையில், இவரிடம் கல்லூரி மாணவி 'சிந்தாமணி கொலை வழக்கு' வருகிறது. கிராமத்து ஏழை மாணவியான சிந்தாமணி (பாமா), மருத்துவக் கல்லூரியில் சேரவருகிறார். அவரை அதே மருத்துவக் கல்லூரியின் பணக்கார மாணவிகள் (மிர்ச்சி கேர்ள்ஸ்) ராகிங் செய்கிறார்கள். ஒரு சில நாட்களிலேயே சிந்தாமணி கொடூரமாகக் கொல்லப்படுகிறாள்.

நடிகை பாமா
நடிகை பாமா

அவர்களைக் கொன்றதாக 'மிர்ச்சி கேர்ள்ஸ்' மீது வழக்கு நடக்கிறது. அவர்கள் மீதான பழியை அகற்ற, பல்வேறு ஆதாரங்களை உருவாக்கி அவர்களை புத்திசாலித்தனமாக விடுவிக்கிறார் எல்.கே. அதன் பிறகு உண்மையான கொலையாளிகளை அவர் என்ன செய்தார் என்பதே கதை. வாரிய தலை, ஒரு கறுப்புக் கண்ணாடி, கறுப்பு கவுன் ஆகியவற்றுடன் அவருடைய தோற்றம் கம்பீரமாக இருக்கிறது. 'வெற்றிக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்' என்பது போன்ற வசனங்கள் நீதிமன்ற வளாகத்தை அதிரவைக்கிறது.

நடிகர் மணிவண்ணன்
நடிகர் மணிவண்ணன்

வழக்கறிஞரின் வாதம், உருவாக்கப்பட்ட சாட்சிகளின் மூலமும் எந்தக் குற்றவாளியையும் தப்பிக்க முடியும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அப்பாவியான தோற்றத்துடன் சிந்தாமணியாக நடித்திருக்கும் பாமா தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். பாமாவின் அப்பாவாக வரும் மணிவண்ணன், விவரம் தெரியாத காவல் ஆய்வாளர் நாசர், அசல் அக்மார்க் வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தி, மருத்துவக் கல்லூரி நிர்வாகி மனோஜ் ஆகிய பல முகங்கள் இந்தக் கதையில் இடம்பிடித்தாலும் எல்.கே.வை மையமாக வைத்தே கதை நகர்கிறது.

நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் காட்சிகள் படத்தின் அலகியலை மீறாமல் விறுவிறுப்பை தருகின்றன. நடிகர் வடிவேல் அவ்வப்போது வந்து நகைச்சுவையில் மக்களை கிச்சுகிச்சு மூட்டுவது எரிச்சல் அடையாத ஈர்ப்பை தந்தது. சிபிஐ அலுவலராக வரும் ரகுவரன் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் விதமும் அடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத காட்சியமைப்பும்தான் 'எல்லாம் அவன் செயல்' படத்தை தலைநிமிர வைத்தது.

வித்யாசாகரின் இசை பக்கபலமாக இருக்கிறது. 'எல்லாம் அவன் செயல்' இந்திய நீதித் துறை, சட்டத் துறை, காவல் துறை ஆகியவற்றைச் சமுதாயத்தின் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றியிருக்கிறது.

ரகுவரன்
ரகுவரன்

இந்தியாவில் ஸ்பாட் எடிட்டிங்கில் உருவாக்கப்பட்ட படம் என்ற பெருமையை 'எல்லாம் அவன் செயல்' பெற்றுள்ளது என்பது மிகையாகாது.

Intro:Body:

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'சிந்தாமணி கொலை கேஸ்' என்ற படத்தின் தமிழ் வெர்ஷனே 'எல்லாம் அவன் செயல்'. தமிழிலும் ஷாஜியே இயக்கியிருக்கிறார். 

மருத்துவக் கல்லூரி மாணவியான சிந்தாமணியின் மர்ம மரணத்தைத் துப்பு துலக்கி, உண்மையான குற்றாவாளிகளுக்குத் தண்டனை வாங்கி தருவது தான் கதை. 

புத்திசாலியான குற்றவியல் வழக்கறிஞர் எல்.கே. (ஆர்கே). குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தால் அவர்கள், மேல் நீதிமன்றத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, வெளியே வந்துவிடுகிறார்கள். எனவே, அத்தகைய குற்றவாளிகளுக்காக எல்.கே. வாதாடி, அவர்களைச் சட்டப்படி வெளியே கொண்டு வருகிறார். அடுத்த நாளே, எவரும் அறியாமல் அவர்களை இவரே தீர்த்துக் கட்டுகிறார். 

இந்த நிலையில், அடுத்து இவரிடம் 'சிந்தாமணி கொலை வழக்கு' வருகிறது. கிராமத்து ஏழை மாணவியான சிந்தாமணி (பாமா), மருத்துவக் கல்லூரியில் சேர வருகிறார். அவரை அதே மருத்துவக் கல்லூரியின் பணக்கார மாணவிகள் (மிர்ச்சி கேர்ள்ஸ்) ரக்கிங் செய்கிறார்கள். ஒரு சில நாட்களிலேயே சிந்தாமணி கொடூரமாகக் கொல்லப்படுகிறாள். 

அவர்களைக் கொன்றதாக 'மிர்ச்சி கேர்ள்ஸ்' மீது வழக்கு நடக்கிறது. அவர்கள் மீதான பழியை அகற்ற, பல்வேறு ஆதாரங்களை உருவாக்கி அவர்களை புத்திசாலித்தனமாக விடுவிக்கிறார் எல்.கே. அதன் பிறகு உண்மையான கொலையாளிகளை அவர்  என்ன செய்தார் என்பதே கதை.

வாரிய தலை, ஒரு கறுப்புக் கண்ணாடி, கறுப்பு கவுன் ஆகியவற்றுடன் அவருடைய தோற்றம் கம்பீரமாக இருக்கிறது.  'வெற்றிக்காக நான் எல்லைக்கும் போவேன்' என்பது போன்ற வசனங்கள் நிதிமன்ற வாளகத்தை அதிர வைக்கிறது. 

வழக்கறிஞரின் வாதம்,உருவாக்கப்பட்ட சாட்சிகளின் மூலமும் எந்தக் குற்றவாளியையும் தப்புவிக்க முடியும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. இதன் மூலம், இந்திய நீதித் துறை, சட்டத் துறை, காவல் துறை ஆகியவற்றைச் சமுதாயத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.