சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ். தொகையை கடந்த ஐந்தாண்டுகளாக வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை பலமுறை விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் அளிக்காததால், எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
சமீபத்தில் இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், ஆகஸ்ட் 2ஆம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் நடிகர் விஷால் இன்று ஆஜராகவில்லை. இதனையடுத்து விஷாலை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்யக் கோரி உத்தரவிட்ட நீதிபதி மலர்மதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஒத்திவைத்தார்.