ETV Bharat / sitara

'நீங்கள் பேனர் வைத்துதான் உங்களை வெளிப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை' - நடிகர் சூர்யா - காப்பான் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னை: நீங்கள் பேனர் வைத்துதான் உங்களை எனக்கு வெளிப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை என காப்பான் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

kaappan press meet
author img

By

Published : Sep 15, 2019, 11:33 AM IST

Updated : Sep 15, 2019, 4:18 PM IST

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் காப்பான் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை, தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில், இயக்குனர் கே.வி.ஆனந்த், நடிகர் சூர்யா, சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், நடிகை சாயிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகர் சூர்யா பேசுகையில், ’எந்த புதுப்படம் வெளியானாலும் கொண்டாட்டங்கள் இருக்கும். ஆனால் சமூகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் பேனர் வைத்துதான் உங்கள் விஸ்வாசத்தை எனக்கு புரியவைக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் செய்யும் ரத்த தானம், ஏழைக் குழந்தைகளுக்கு செய்யும் கல்வி உதவி இதெல்லாம் எனக்கு தெரியும். எனவே, இனி என திரைப்படங்களுக்கு பேனர் வைக்கவேண்டாம்’ என்றார்.

Intro:காப்பான் திரைப்படம் ரீலீசின் போது பேனர் வைக்க வேண்டாம் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள். சுபஸ்ரீ விபத்தை மேற்கோள் காட்டி பேனர்களை தவிர்த்து நலதிட்ட உதவிகள் செய்ய அறிவுரை.Body:பாப்பான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது அப்போது நடிகர் சூர்யா பேசுகையில்

எனது 37வது படம் காப்பான், ஒருவரின் வாழ்க்கை பற்றிய படம் என்றால் எனக்கு ஆர்வமாக இருக்கும் அதை பதிவு செய்ய தவறவிடமாட்டேன்.
அங்கீகாரம் தேடாத பல பேர் தன்னலம் இல்லாமல் கடுமையான சூழ்நிலையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பற்றிய ஒரு பதிவாக படம் அமைந்தது.

யாரோ ஒரு முன்னனி நடிகருக்கு தயாரான கதை சூழ்நிலை காரணமாக எனக்கு வந்து சேரும் அப்படி வந்த படங்கள் எனது கேரியரில் வெற்றி படமாக அமையும் என்பது தான் எனது ஜாதகம்.

எஸ்.பி.ஜி. அதிகாரிகளுடன் 4 நாட்கள் இருந்தேன் அவர்களும் சாதாரண இல்லத்தில் தான் உள்ளனர். ஆனால் பணி என்று வந்துவிட்டால் உயிரை விட தயாரக இருக்க வேண்டிய பணி அது என்னை ஆச்சர்யபடுத்தியது.

அதே போல விஜயகுமார் ஐ.பி.எஸ் அவர்களும் எங்களுக்கு வழிக்கட்டினார், அவருக்கும் நன்றி.

பெரியாரை மேற்கோள் காட்டி பேசிய நடிகர் சூர்யா
கோட்சே காந்தியயை கொன்றதுக்கு பிறகு பல கலவரங்கள் நடந்தன அனைவரும் கோட்சே மீது கோவமாக இருந்த நிலையில் பெரியார் மட்டும் கோட்சே பயன்படுத்திய துப்பாக்கியயை சுக்கு நூறாக உடைக்க சொன்னார், அதை கேட்டவர்கள் கோட்சேவை பற்றி பேசினால் துப்பாக்கியயை பற்றி பேசுகிறீகள் என பெரியாரிடம் கேட்ட போது கோட்சேவும் வெறும் துப்பாக்கி தான் என சொன்னாரம். ஒரு கருத்தியல் எவ்வாறு செயல்படும் என்பதை சுலபமாக சொல்லி சென்றார். அதே போல கருத்தியல் ரீதியான கதை இது.

எப்போது புதுப்படம் வெளியானாலும், கொண்டாடங்கள் இருக்கும், செலவுகள் இருக்கும். சமூகத்தில் என்ன நடைபெறுகிறது அதை புரிந்து நாம் செயல்படவேண்டும்.

ஆகையால் மிகவும் தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் ஒரு நிகழ்வு நடைபெற்ற பின்னரும் நாம் பேனர் வைக்கக்கூடாது, (சுப ) நீங்க பேனர் வைத்து தான் உங்களை பற்றி எனக்கு தெரியவேண்டும் என்பதில்லை, ரசிகர்கள் செய்கிற ரத்த தானம், பள்ளிகளுக்கு செய்கிற உதவிகள் எனக்கு தெரியும்,

Conclusion:எல்லா ஊர்களிலும் தேவைகள் உள்ளது, அரசு பள்ளிக்கு, கழிப்பறைக்கு, என பல தேவைகள் உள்ளன அதை நாம் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை வேண்டுகோள்.
Last Updated : Sep 15, 2019, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.