அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் ‘கோன் பனேகா குரோர்பதி 12’ நிகழ்ச்சி விரைவில் பிரபல தொலைக்காட்சியில் தொடங்கவுள்ளது. மே 9 முதல் இந்நிகழ்சிக்காக போட்டியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கரோனா வைரஸ் காரணமாக இணையம் வழியாகப் போட்டியாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரவு 9 மணிக்கு அமிதாப் பச்சன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் நிகழ்ச்சிக்கு இடையே கேட்கப்படும் கேள்விக்கு, போட்டியாளர்கள் சோனி செயலியில் பதில் அளிக்க வேண்டும் என்றும் சரியாக பதில் கூறும் நபர்கள் அமிதாப் பச்சனுடன் நிகழ்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அமிதாப் எந்த மாதிரியான கேள்வி கேட்பார் என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாகவுள்ளனர். மேலும் சமீபத்தில் இதற்கான ப்ரோமோ வெளியாகி வைரலானது. பலரும் லாக்டவுன் நேரத்தில் எப்படி ப்ரோமோ எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இயக்குநர் நிதேஷ் திவாரி இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவதது, “அமிதாப் பச்சன் தோன்றிய கோன் பனேகா குரோர்பதி ப்ரோமோ என் வீட்டில் எடுக்கப்பட்டது. நான் இயக்க, என் மகள் அஸ்வினி ஐயர் திவாரி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இதுபோன்று வீட்டில் எடுப்பது, இது தான் முதல் முறை. என் ஒன்பது வயது மகள் ஒளிப்பதிவாளராக பணியாற்ற அமிதாப் பச்சன் சம்மதம் தெரிவித்ததது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உணவின்றி தவித்த மக்களுக்கு உதவிய சல்மான் கான்