ETV Bharat / sitara

ஜுமான்ஜி படத்தின் அடுத்த பாகத்தில் நிக் ஜொனாஸ்!

ஜுமான்ஜி படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜொனாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நிக் ஜொனாஸ்
author img

By

Published : Feb 7, 2019, 7:51 PM IST

1995-ம் ஆண்டு வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களிடம் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜுமான்ஜி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'ஜுமான்ஜி : வெல்கம் டூ தி ஜங்கில்' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இதைதொடர்ந்து வெளியாக உள்ள இதன் மூன்றாம் பாகத்தில் பிரபல பாடகர் நிக் ஜொனாஸ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்து கொண்டதையடுத்து இந்தியாவில் இவர் மிக பிரபலமானார். தற்போது இவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தி உள்ளார். இந்த படத்தில், இதன் முந்தைய பாகத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:திண்டுக்கல் 7.2.19

நத்தம் துவரங்குறிச்சி நான்கு வழி சாலை விளைநிலங்களுக்கு நடுவே அமைவதை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Body:திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து துவரங்குறிச்சி வரை நான்கு வழி சாலை அமைய உள்ளது. இந்த நான்குவழி சாலை விளைநிலங்கள், தோப்புகள் மற்றும் வீடுகள் அதிகமுள்ள இடங்களுக்கு நடுவே கட்டமைக்கும் திட்டம் போடப்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு தங்களின் வாழ்வாதாரமும் இருப்பிடமும் பறிபோகும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுபற்றி நம்மிடையே பேசிய நத்தம் விவசாயி பிச்சையன்,"நத்தம் துவரங்குறிச்சி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். அதை எதிர்ப்பது எங்களது நோக்கம் இல்லை. ஆனால் மதுரை நத்தம் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதை போல சாலையின் இருபுறமும் பணி நடந்தால் யாருக்கும் பெரிய அளவு சேதம் இருக்காது. இந்த சாலை விளைநிலங்கள் நடுவே அமைய உள்ளது. இதனால் மா, தென்னை, புளியமரம், கொய்யா போன்ற பல ஆயிரக்கணக்கான மரங்கள் அழியக்கூடும்.

மேலும், அந்த இடங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள், 500 ஆழ்துளை கிணறுகள், 150 கிணறுகள் போன்றவையும் அகற்றப்படும் பட்சத்தில் அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்படையும். அப்படி நடந்தால் நாங்கள் எங்கே சென்று வாழ்வது. அதனால்தான் விளைநிலங்களுக்கு நடுவே வராமல் சாலையின் ஓரம் அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்" எனக் கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.