நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை இந்தப் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்த வருமான வரித்துறை அலுவலர்கள் விஜய்யை தங்களுடன் அழைத்துச் சென்று பின்னர் சென்னையிலுள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே கடந்த 6ஆம் தேதி முதல் மீண்டும் என்எல்சியில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களாக சுரங்கம் முன்பாக குவிந்த விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையினர் தடயடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
-
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020
இதனிடையே நேற்று படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த விஜய், வேன் மீது ஏறி தனது ரசிகர்களைக் கண்டு கையசைத்தார். பின்னர் ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படத்தை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதுமட்டுமல்லாது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் '#ThalapathyVIJAYselfie' என்ற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்த விஜய்; ரசிகர்கள் உற்சாகம்