ஹாலிவுட் சினிமாவில் வெளிவந்த எத்தனையோ திகில் நிறைந்த பேய் படங்களை கண்டு மிரண்டுபோனோம். ஆனால் 'தி கான்ஜூரிங்', 'அனபெல்' ஆகிய திரைப்படங்கள் பேய் படத்திற்கான டிரேட் மார்க்கை உருவாக்கியது என்றே கூறலாம். 'தி கான்ஜூரிங்' படத்தில் இடம்பெற்ற பொம்மையை வைத்து உருவானதுதான் 'அனபெல்'. 'லைட்ஸ் அவுட்' படத்தை இயக்கிய டேவிட் எஃப் சேன்பெர்க் 'அனபெல்' படத்தை இயக்கினார்.
யதார்த்தமான காட்சி நகர்வுகளை கொண்டு திடீரென ஏற்படும் பதற்றம் பார்ப்பவரின் கண்களை அதிர்வூட்ட வைத்தது. தமிழ் சினிமாவில் பார்ப்பவரை பயமுறுத்துவதற்காகவே சில காட்சிகள் திணிக்கப்படும். ஆனால், 'அனபெல்'படத்தில் பயமுறுத்துவதற்கான காட்சிகளை எடுக்கப்படாமல் அமைதியான நேரத்தில் பூகம்பம் வருவதுபோல் நேர்த்தியான முறையில் இருந்தது.
'தி கான்ஜூரிங்' படத்தை இயக்கிய ஜேம்ஸ் வான் அனபெல் படத்தின் தயாரிப்பாளார் ஆவார். தி கான்ஜூரிங், அனபெல் இந்த வரிசையில் இதன் மூன்றாவது பாகம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் பாகத்திற்கு 'அனபெல் கம்ஸ் கோம்' என பெயரிட்டுள்ளனர். தி நன், ப்ளட் மங்கி இட் ஆகிய படங்களை தயாரித்த டெளபர்மேந்தான் இப்படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளராக இருந்த கேரி டெளபர்மேன் அனபெல் கம்ஸ் கோம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இப்படத்தை ஜூன் 28ஆம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ காட்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
On June 28, #AnnabelleComesHome. pic.twitter.com/QhfcSow5H9
— Annabelle Comes Home (@annabellemovie) March 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On June 28, #AnnabelleComesHome. pic.twitter.com/QhfcSow5H9
— Annabelle Comes Home (@annabellemovie) March 15, 2019On June 28, #AnnabelleComesHome. pic.twitter.com/QhfcSow5H9
— Annabelle Comes Home (@annabellemovie) March 15, 2019