ETV Bharat / sitara

சட்டையில்லாமல் சிம்பு; வைரலாகும் கட்டுடல் புகைப்படம்! - GVM

'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் புது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SIMBU, SHIRTLESS SIMBU, SIMBU NEW LOOK , SIMBU GVM, NEW STR LOOK
new-simbu-photo-viral-in-social-media
author img

By

Published : Aug 13, 2021, 8:46 PM IST

சென்னை: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

முதல் கட்டப் படப்பிடிப்பு

கிராமத்துப் பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வந்தது.
இப்படத்திற்காக தனது உடலை முழுவதும் குறைத்து இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார், சிம்பு. இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சிம்புவின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SIMBU, SHIRTLESS SIMBU, SIMBU NEW LOOK , SIMBU GVM, NEW STR LOOK
சிம்புவின் செல்ஃபி

தொடர்ந்து வைரலாகும் எஸ்டிஆர்

இப்படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல, படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சிம்பு புல்லட் பைக்கை ஓட்டும் புகைப்படம் நேற்று முன்தினம் (ஆக. 11) வெளியாகி அதுவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'PM தோனி - CM விஜய்' - மதுரையை கலக்கும் சுவரொட்டிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.