மறைந்த இயக்குநர் சத்யஜித் ரே எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு புதிய அந்தாலஜி படத்தை நெட்ஃபிளிக்ஸ் தயாரித்துள்ளது. ’ரே’ என்னும் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அபிஷேக் சவுபே, ஸ்ரீஜித் முகர்ஜி, வசன் பாலா ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தப் படமானது காதல், காமம், துரோகம், உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'ரே' படத்தில் பாஜ்பாய், கஜ்ராஜ் ராவ், அலி ஃபசல், ஸ்வேதா பாசு பிரசாத், அனிந்திதா போஸ், கே.கே.மேனன், பிடிதா பேக், திபேண்டு பட்டாச்சார்யா, ஹர்ஷ்வர்தன் கபூர், ராதிகா மதன், சந்தன் ராய் சன்யால், கன்ஷா ரஞ்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது இந்தப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் ஜூன் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.