நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர் ‘தி கிரவுன்’. 2016ஆம் ஆண்டு தொடங்கிய இத்தொடர் தற்போது நான்கு சீசன்களைக் கடந்துள்ளது. நான்காவது சீசன் கடந்த மாதம் 15ஆம் தேதி ஒளிபரப்பானது.
நான்காவது சீசன், அரச நிகழ்வுகளைச் சித்திரிப்பதுபோல் உள்ளது என்றும் குறிப்பாக வேல்ஸ் இளவரசர், இளவரசி ஆகியோரின் திருமண முறிவு கற்பனை கதைபோல் இல்லை என்று விமர்சனம் எழுந்தது.
தொடர்ந்து இது குறித்து இங்கிலாந்தின் கலாசார செயலாளர் ஆலிவர் டவுடன் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “இத்தொடர் ஒளிபரப்பானபோது மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் நான்காவது சீசனில் வேல்ஸ் இளவரசர், இளவரசியின் திருமண முறிவு, ஒலிவியா கோல்மேன் ராணியாக நடித்ததது போன்ற பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
இதை இளம்தலைமுறையினர் பார்த்தால், கற்பனை கதை என்று நம்பமாட்டார்கள். அதனால் சீரிஸ் தொடங்குவதற்கு முன்பு, பொறுப்புத் துறப்பு (டிஸ்கிளைமர்) சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், “நாங்கள் எப்போதுமே கிரவுனை நாடகமாக வழங்கியுள்ளோம். இது வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனையாக உருவாக்கப்பட்டுவருகிறது என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதன் விளைவாக, ‘தி கிரவுன்’ சீரிஸ் தொடங்குவதற்கு முன்பு பொறுப்புத் துறப்பைச் சேர்க்க மாட்டோம்” என்று கூறியுள்ளது.