வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ’நேர்கொண்ட பார்வை’.இந்த படமானது இந்தியில் வெளியான ’பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இது முழுக்க பெண் உரிமையை பற்றி பேசுவதாக உள்ளது.இந்த படத்தில் அஜித் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வழக்கம் போல் தனது ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.
![நேர்கொண்ட பார்வை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4155483_858_4155483_1565979064988.png)
இந்நிலையில் இணையத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் சண்டை காட்சி மேக்கிங் வீடியோ வெளியானது.இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.குறிப்பாக இந்த வீடியோவில் அஜித் பைக்கில் அமர்ந்தபடி மிக கோபமாக இருக்கும் காட்சி , அங்கு பணிபுரியும் நபர்களுடன் சிரித்துபேசும் காட்சி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.
![வைரலான வீடியோ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4155483_mass.jpg)
![அஜித்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4155483_ajith.jpg)