நடிகர் சிவகார்த்திகேயன் இறுதியாக இயக்குநர் பாண்டிராஜின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதைத் தொடர்ந்து 'இரும்புத் திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார்.
இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிக்கிறார். அர்ஜுன், அபய் தியோல் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
![hero](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4817195_hero-insta.jpg)
தற்போது 'ஹீரோ' படத்தின் பாடலுக்குப் படக்குழு பிரான்ஸ் சென்றுள்ளது. அப்போது அங்கு இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், நெல்சன் திலீப் குமார், நடன இயக்குநர் சதீஷ் ஆகியோருடன் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை நெல்சன் திலீப் குமார் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் இயக்கும், படத்தில் நடிக்க உள்ளார். லைகா புரொடெக்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் வாசிங்க: 'ஹீரோ' சிவாவின் இரண்டாம் பார்வை!