ETV Bharat / sitara

'தோத்தா மேட்ச்தான் முடியும்... லைப் முடியாது..!' - சிவகார்த்திகேயன் உருக்கம்

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசியிருக்கிறார்.

Nejamundu Neramiyundu odu raja
author img

By

Published : Jun 3, 2019, 8:47 PM IST

'கனா' வெற்றிப் படத்தை தொடர்ந்து 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' எனும் படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், சின்னத்திரை புகழ் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் நாஞ்சில் சம்பத், ராதாரவி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், மயில்சாமி உள்ளிட்ட திரை மற்றும் இணையதள பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

என்னை இயக்கிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் நீங்கள் கொடுக்கும் நம்பிக்கை மட்டும்தான். ஜெயிக்கும் போது ஒரு அணியாய் நிற்பது போன்று தோன்றும். ஆனால் தோற்கும் போது தனியாக நிற்பது போன்று புரியும். தோற்பது ஜெயிப்பது பிரச்னை இல்லை. ஆனால் நிற்கிறோம் என்பதுதான் பிரச்சனை.

மிஸ்டர் லோக்கல் படம் சரியாக போகவில்லை. அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. உங்கள் வாழ்க்கையில் உள்ள கதைகள், பிடித்த கதைகள், நாம் ரசிக்கும் கதைகள் இதைத் தான் அடுத்தடுத்து லைன்அப் செய்து வைத்திருக்கிறேன். இவை எல்லாம் ஒரு மேட்ச்தான். தோற்கிறோம் என்றால் அந்த மேட்ச்தான் முடியும். லைப் முடியாது. அதை நான் நம்புகிறேன்.

siva-rio
சிவா-ரியோ

இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் லட்சக்கணக்கான ரசிகர்கள் காசில்தான். அந்தக் காசில் அவர்களின் உழைப்பு உள்ளது. அதே போன்று என் உழைப்பும் உள்ளது. நான் தாண்டி வந்த வலி, வேதனை, துரோகம், நட்பு ,பாசம் வெற்றி அதையும் தாண்டி ஒரு வெறி. அந்த வெறி என்னை விடாது. நான் ஓடிக் கொண்டேதான் இருப்பேன்.

அடுத்து நான் நடிக்க உள்ள படங்கள் என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரக் கூடிய படமாக இருக்கும். நான் கடைசியாக நடித்த படம் கூடம் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாகத்தான் அமைந்தது. அதை பற்றி இப்போது பேச வேண்டாம். ஒரு நடிகனாக மக்களை திருப்தி படுத்தனும். அதைத் தாண்டி முதல் நாள் முதல் ஷோ என் முகத்தை பெரிய ஸ்கிரீனில் பார்க்க ஆசைப்பட்டு வரும் அனைவரையும் திருப்திபடுத்தும். தயாரிப்பாளர்களுக்கும். டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு லாபம் தரும் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் உழைத்துக் கொண்டிருக்கிறேன், என்று உருக்கமாக பேசி முடித்தார்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ டிரெய்லர் வெளியீட்டு விழா

Nenjanmundu Nermaiyundu Oduraja_ Trailer

Here we go, the fun filled trailer of #NenjamunduNermaiyunduOduRaja - https://t.co/UWkKnzdaSU 🎉🎊

#NNORTrailer #NNORFromJune14

@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @SKProdOffl @karthikvenu10 | @rio_raj | @KanchwalaShirin | @RjVigneshkanth | @ShabirMusic 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.