இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'நெற்றிக்கண்'. இந்தப் படம் ’ப்ளைண்ட்’ என்னும் கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். மிலந்த் ராவ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுபெற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக 'நெற்றிக்கண்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நயன்தாரா கண்பார்வை அற்றவராக நடித்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கிரிஷ் இசையமைத்துள்ளார்.
நயன்தாரா முதன்முறையாக கண்பார்வை அற்றவராக நடித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே 'நெற்றிக்கண்' மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனையடுத்து இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தற்போது நேரடியாக வெளியாகவுள்ளது.
-
இதோ ஒரு உற்சாகமான அறிவிப்பு! விரைவில் எங்கள் அடுத்த #DisneyPlusHotstarMultiplex மூவி! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண்! #Netrikann #ComingSoon #Nayanthara @VigneshShivN @Milind_Rau @ggirishh @sidsriram pic.twitter.com/zQI8Wajp0p
— Disney+ Hotstar (@DisneyPlusHS) July 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இதோ ஒரு உற்சாகமான அறிவிப்பு! விரைவில் எங்கள் அடுத்த #DisneyPlusHotstarMultiplex மூவி! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண்! #Netrikann #ComingSoon #Nayanthara @VigneshShivN @Milind_Rau @ggirishh @sidsriram pic.twitter.com/zQI8Wajp0p
— Disney+ Hotstar (@DisneyPlusHS) July 21, 2021இதோ ஒரு உற்சாகமான அறிவிப்பு! விரைவில் எங்கள் அடுத்த #DisneyPlusHotstarMultiplex மூவி! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண்! #Netrikann #ComingSoon #Nayanthara @VigneshShivN @Milind_Rau @ggirishh @sidsriram pic.twitter.com/zQI8Wajp0p
— Disney+ Hotstar (@DisneyPlusHS) July 21, 2021
விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாட்ஸ்டாரில் வெளியாகும் நயன்தாராவின் இரண்டாவது படம் இதுவாகும். முன்னதாக 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நீங்கள் இன்னும் சிறக்க வேண்டும்' - நயன்தாராவை வாழ்த்திய சமந்தா