ஆர். ஜே. பாலாஜியும் என்.ஜி. சரவணனும் இணைந்து இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. நாகர்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை கவனித்துக் கொள்கிறார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கன்னியாகுமரியிலுள்ள பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த நயன்தாரா, பிற்பாடு திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
இப்படத்திற்கு நயன்தாரா முழுக்க விரதமிருந்து, சைவ உணவுகளை உண்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இதற்கு முன்பு தெலுங்கில் 'ராமராஜ்ஜியம்' திரைப்படத்திற்காக விரதமிருந்தார் நயன்தாரா.
இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு - தாய்லாந்தில் தொடங்கிய இயக்குநர் மணிரத்னம்!