ETV Bharat / sitara

இந்த வருஷ தீபாவளி 'மூக்குத்தி அம்மன்' தீபாவளி! - மூக்குத்தி அம்மன் படம் அப்டேட்

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா
நயன்தாரா
author img

By

Published : Oct 23, 2020, 5:56 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. வானொலி வர்ணனையாளராக மிகவும் பிரபலமான இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு வெளியான 'எல்கேஜி' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில், தற்போது இயக்குநராகக் களமிறங்கியுள்ளார், ஆர்ஜே பாலாஜி. நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இந்தப் படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி, நயன்தாராவுடன் இப்படத்தில் மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏழைக் குடும்பத்தில் தவித்து வரும் ஆர்ஜே பாலாஜிக்கு, அம்மன் உதவி செய்வது போன்று இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. ஆக்‌ஷன், காதல், எமோஷன் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, முதல் முறையாக கடவுள் வேடத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழில் ஒரு அம்மன் படம் உருவாகி வருவதுடன், பக்தி, பேண்டஸி கலந்த பாணியில் நயன்தாரா நடித்திருப்பதால் இந்தப் படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக இத்திரைப்படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தீபாவளி விடுமுறைக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

முன்னதாக கரோனா ஊரடங்கின் மத்தியில், தமிழில், பொன்மகள் வந்தாள், பெண் குயின், லாக்கப் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.