'தர்பார்' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்துள்ளார். 'தலைவர் 168' என்ற பெயரில் உருவாகிவரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட வெற்றிக்குப் பின் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படமும் கிராமத்துக் குடும்ப பின்னணியில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அண்ணன் - தங்கை, அப்பா - மகள், அண்ணன் - தம்பி என குடும்ப பிணைப்பை மையமாக வைத்து சிவா இயக்கிய அனைத்துப் படங்களுமே வசூல் சாதனை படைத்த நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
-
Lady Superstar #Nayanthara joins the cast of #Thalaivar168@rajinikanth @directorsiva pic.twitter.com/RtofFJKCG5
— Sun Pictures (@sunpictures) January 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Lady Superstar #Nayanthara joins the cast of #Thalaivar168@rajinikanth @directorsiva pic.twitter.com/RtofFJKCG5
— Sun Pictures (@sunpictures) January 31, 2020Lady Superstar #Nayanthara joins the cast of #Thalaivar168@rajinikanth @directorsiva pic.twitter.com/RtofFJKCG5
— Sun Pictures (@sunpictures) January 31, 2020
'தலைவர் 168' படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவிருக்கும் நிலையில், தற்போது நயன்தாராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் என நாயகிகளை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு ஐதராபாத்தில் நடத்தி முடித்துள்ளது. தற்போது நயன்தாராவும் இதில் இணைந்திருப்பது படத்தின் திருப்புமுனை கதாபாத்திரமாக இருக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.