தேசிய விருது, திரைப்பட விருது பெற்ற கன்னட நடிகரான சஞ்சாரி விஜய் நேற்றுமுன்தினம் இரவு (ஜூன் 12) தனது நண்பரின் வீட்டிலிருந்து வரும்போது, அவரின் இருசக்கர வாகனம் திடீரென சறுக்கி சாலை விபத்து ஏற்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சஞ்சாரி விஜய் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்தால் நடிகர் சுயவினைவின்றி கோமா நிலைக்குள்ளானார். ‘அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உள் ரத்தப்போக்கு ஏற்பட்டது. அடுத்த 48 மணிநேரம் அவருக்கு மிகவும் முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்’ என நடிகரின் சகோதரர் சித்திக் குமார் தெரிவித்தார்.
இவர் 'நானு அவனல்ல அவலு' (நான் அவரல்ல, அவள்) படத்திற்கு பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.