பாலிவுட்டின் மூத்த நடிகர் நசீருதீன் ஷா கடைசியாக 'Mee Raqsam' படத்தில் நடித்திருந்தார். இவருக்கு தற்போது நிமோனியா நோய் இருப்பது தெரியவந்ததால், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை அவரது மனைவி ரத்னா பதக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நசீருதீன் ஷாவுக்கு நிமோனியா நோய் இருப்பதால் அவரை நேற்று (ஜூன் 29) மருத்துவமனையில் அனுமதித்தோம்.
அவரது உடல் நிலை சீராக உள்ளது. விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவோம்" என்றார்.
இதையும் படிங்க: சிம்பு பட நடிகையின் கணவர் உயிரிழப்பு